அரசியல்

"OPS-ஐ இந்தியா கூட்டணி அழைக்கும்" - பெங்களூரு புகழேந்தி

தந்தி டிவி

ஓபிஎஸ் அணி சார்பில் புரட்சித் தொண்டன் என்ற பெயரில் புதிய நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாளிதழின் முதல் பிரதியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட, 1972-ஆம் ஆண்டில் இருந்து கட்சியில் உறுப்பினர்களாக உள்ள 5 மூத்த தொண்டர்கள் அவற்றை பெற்றுக் கொண்டனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக நமது எம்ஜிஆர் இயங்கி வந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு சசிகலா மற்றும் டிடிவி தினகரனிடம் இருந்து பிரிந்து வந்த எடப்பாடி பழனசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து நமது அம்மா என்கிற பெயரில் நாளிதழை தொடங்கினர். கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்னை தொடங்கி, ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது ஓபிஎஸ் அணி தனியாக நாளிதழை தொடங்கி உள்ளது. நாளிதழ் வெளியீட்டு விழாவில் ஓ.பன்னீர் செல்வம், பன்ருட்டி ராமச்சந்திரன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பெங்களூரு புகழேந்தி, ஓ.பன்னீர் செல்வத்தை இந்தியாவும் அழைக்கும், இந்தியா கூட்டணியும் அழைக்கும் என்று கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்