அரசியல்

சென்னை ராஜீவ்காந்தி GH-யில் பகீர்...கட்டைப்பையால் சிக்கிய நபர் - மாட்டிக்கொண்ட மொமண்ட்

தந்தி டிவி

சென்னை ராஜீவ்காந்தி GH-யில் பகீர்...கட்டைப்பையால் சிக்கிய நபர் - கொண்டையை மறந்து மாட்டிக்கொண்ட மொமண்ட்

சென்னையில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி பிரித்து விற்ற மெக்கானிக் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பார்க்கிங்கில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் கையில் செங்குன்றம் என பெயர் அச்சடிக்கப்பட்ட கட்டைப்பையுடன் வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று ஒருவர் மாஸ்க் அணிந்தபடி கட்டைப்பையுடன் நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்தான் தொடர் திருட்டில் ஈடுபட்ட செங்குன்றத்தை சேர்ந்த மெக்கானிக் முருகன் என்பது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியது அம்பலமானது. இதையடுத்து முருகனையும், வாகனங்களை பிரித்து விற்க உடந்தையாக இருந்த தங்கபாண்டியன் என்பரையும் போலீசார் கைது செய்தனர். போக்கிரி படத்தில் இவ்வளவு வேலை செய்தோம், ஆனா மண்ட மேல இருக்க கொண்டைய மறைக்க மறந்துட்டோம் என்ற வடிவேலுவின் காமெடி காட்சி போல, கையில் இருந்த கட்டை பையை மறைக்காத மெக்கானிக் போலீசாரிடம் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்