ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்து உள்ளார். நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், ஆஸ்திரேலியாவில், இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுவதாகவும், இந்திய இளைஞர்கள் நம்பிக்கை நாயகர்களாக திகழ்வதாகவும் கூறி உள்ளார்.