அரசியல்

CM Vijay | Atlee Speech| CM விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அட்லீ - விஜய் சேதுபதியின் ரியாக்‌ஷன்

CM விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அட்லீ - விஜய் சேதுபதியின் ரியாக்‌ஷன்

thanthitv

#cmvijay #atleespeech #vijaysethupathi முதலமைச்சர் விஜய்யின் அரசியல் மற்றும் திரையுலகப் பங்களிப்பு குறித்து இயக்குநர் அட்லி பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சென்னையில் நடைபெற்ற 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லி, தமக்குத் திரைத்துறையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் நடிகர் விஜய் தான் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். விஜய் அண்ணாவின் தொடர்ச்சியான வாய்ப்புகளாலும், ஷாருக்கானை வைத்துப் படம் இயக்க அவர் கொடுத்த ஊக்கத்தினாலுமே தனது வாழ்க்கை மாறியதாக அவர் தெரிவித்தார். மேலும், அவர் தற்போது முதலமைச்சராகிவிட்டதால் தனக்கு இனி படம் கொடுக்க வாய்ப்பில்லை என்றாலும், அவர் என்றென்றும் தமது அண்ணன் தான் எனப் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்துப் பேசிய அட்லி, அடுத்த தலைமுறை அரசியலை மிகவும் வலிமையானதாக விஜய் மாற்றி வருவதாகப் புகழ்ந்தார். தற்போதைய சூழலில் ஐந்து வயது குழந்தைகூடச் சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கவனிக்கும் அளவுக்கு வலிமையான தலைமுறையை அவர் உருவாக்குவதாகவும், சமூகத்திற்குச் சரியானதைச் செய்வதே அரசியல் எனவும் அட்லி பேசியுள்ளார்.

Sivagangai | சிவகங்கை இரட்டைக்கொலை சம்பவம் - தேசிய நெடுஞ்சாலையில் இறங்கிய உறவினர்கள்

Chennai HC | "நிறம், முடியை வைத்து கிறிஸ்தவர் எனக் கூறுவதா?" உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

VS Babu Health | VS பாபு உடல்நிலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Maduranthakam | By Election | மதுராந்தகம் இடைத்தேர்தல்.. மாலை வரை அவகாசம்

Trump |"மிரட்டல் விடுக்கும் அமெரிக்கா..தக்க பதிலோடு இருக்கும் இந்தியா" பொருளாதார வல்லுநர் சேதுராமன்