அரசியல்

இயற்கையின் மீது தனி விருப்பம் கொண்டவர் வாஜ்பாய்...

வாஜ்பாய்க்கு பிடித்த விஷயங்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தந்தி டிவி

அதற்கடுத்ததாக அல்மோராவும், மவுண்ட் அபுவும் வாஜ்பாயின் மனதுக்கு பிடித்த இடங்கள். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த வாஜ்பாய், நமிதா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இசையிலும், நடனத்திலும் ஆர்வம் அதிகம் கொண்டவர் வாஜ்பாய்.

பள்ளிப்பருவத்திலிருந்து இலக்கிய ஈடுபாடு கொண்டதால் எழுத்திலும் தனி முத்திரை பதித்தவராக அடையாளம் காணப்பட்டார். பல கவிதை நூல்களையும் சுயசரிதையையும் எழுதினார்.

வாஜ்பாய் கவிதைகள் என்ற தலைப்பில் தமிழிலும் அவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. அவரின் விருப்பமான உடையாக இருந்தது வேட்டி தான். ஆனால் பணி நிமித்தமாக அவர் பதானி சூட்டை அணிந்தபடி தான் எங்கும் செல்வார். வாஜ்பாய்க்கு பிடித்த வண்ணம் என்றால் அது ஊதா நிறம் தான். ஊதா நிறத்திலான உடைகளை தேர்வு செய்து அணிவதில் ஆர்வம் காட்டுவார். சீன உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார் வாஜ்பாய்.

இந்திய உணவுகளை பொறுத்தவரை கிச்சடி, கீர், மற்றும் மால்புவா உள்ளிட்டவை பிடித்த உணவாகவே இருந்துள்ளது. ஹிந்துஸ்தானி பாடகர் பீம்சன் ஜோஷியின் பாடல்களை ரசித்துக் கேட்பார் வாஜ்பாய். மேஸ்ட்ரோ கலைஞர் அம்ஜத் அலி கானும் இவருக்கு பிடித்தமான கலைஞர்.

ஹரி பிரசாத் சவுராசியாவின் புல்லாங்குழல் இசையை ஓய்வான நேரத்தின் போது கேட்டு மகிழ்வது வாஜ்பாயின் வழக்கம். பின்னணி பாடகர்களான லதா மங்கேஸ்வர், முகேஷ் மற்றும் முகமது ரபி உள்ளிட்டோரின் குரல்களும் வாஜ்பாயின் பிடித்தமான பட்டியலில் உண்டு.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி