மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த
26ஆம் தேதி சி.பி.ஐயினால் கைதான டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சல் விசாரித்தார். சிபிஐ வழக்கில் அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய வேண்டிய அவசரமும், அவசியமுமில்லை என கெஜ்ரிவால் தரப்பில்
வாதிடப்பட்டது. அர்விந்த் கெஜ்ரிவாலின் மனுவுக்கு 7
நாட்களுக்குள் பதில் அளிக்க சிபிஐக்கு உத்தரவிட்ட
நீதிபதி, விசாரணையை ஜூலை 17க்கு தள்ளி வைத்தார்.