டெல்லி சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், வரும் 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் அமைச்சரவை சகாக்களும் பதவியேற்க உள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.