அரசியல்

Annamalai | அண்ணாமலை பரபர அறிவிப்பு

Annamalai | அண்ணாமலை பரபர அறிவிப்பு

thanthitv

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் பட்டியலில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கோவை சிங்காநல்லூரில் போட்டியிடலாமா என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வந்த சூழலில், அந்த தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து பியூஸ் கோயலை சந்தித்த அண்ணாமலை, தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இருப்பினும் அவரிடம் பாஜக தலைமை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், பிற்பகலில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில், அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கட்சி அறிவித்துள்ள வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், என்டிஏ கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை

TVK Vijay | Chennai | கிளம்பிய விஜய் வாகனம்.. வாசலிலேயே காத்திருந்த சர்ப்ரைஸ்

CBSE Syllabus | DMK | காலையிலேயே கடுமையாக கொதித்து CM ஸ்டாலின் போட்ட ட்வீட்

CM Stalin | Nellai | DMK | ``நம்ம திட்டங்களை காப்பியடிச்சு ஸ்டிக்கர் ஒட்டி..'' | விளாசிய CM ஸ்டாலின்

BREAKING || "பதவி விலகுகிறேன்" - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பால் பெரும் பரபரப்பு