அரசியல்

"ஆந்திராவுக்கு 3 தலைநகர் அமைவது உறுதி" - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைவது உறுதி என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆந்திராவுக்கு 3 தலைநகர்கள் அமைப்பதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மசோதா தொடர்பாக எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலளித்தார். இந்த விவகாரத்தில் அமராவதிக்கு எதிராக எந்தவித காழ்ப்புணர்ச்சியையும் தான் காட்டவில்லை எனவும் , அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகரமாகவும், கர்னூல் சட்ட தலைநகரமாகவும் செயல்படும் என கூறினார். மேலும், அமராவதிக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவழிக்க விரும்பவில்லை எனவும் அனைத்து சமூகத்தினரின் ஆதரவையும் பெற்று 151 எம்எல்ஏக்களுடன் முதல்வரான தனக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதே நோக்கம் என கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு