சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற சமூக ஊடகம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜல்லிக்கட்டு, தானே புயல்,வர்தா புயல் போன்ற காலகட்டத்தில் சமூக ஊடங்கள் பெருமளவு உதவி செய்ததாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பாமக தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.