அரசியல்

"ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது" - அன்புமணி

காவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

காவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆற்றுப் படுகை மேலாண்மை சட்டத்தை இயற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகவும் இது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் தேவையற்றது. அதற்கான சட்ட முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அது தான் தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் நன்மையாக அமையும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்