அரசியல்

ஆளுநர் மீதான பாலியல் புகார்.. ம‌ம்தா பானர்ஜி பகிர் குற்றச்சாட்டு | Ananda Bose | West Bengal

தந்தி டிவி

மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட பெண்ணுக்காக தனது நெஞ்சில் ரத்தம் வடிகிறது என்று, முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றும் பெண் ஒருவர், ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு முறையல்ல இருமுறை அந்த பெண் ஆளுநரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது வெட்கக்கேடானது என தெரிவித்த மும்தா பானர்ஜி, பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட பெண்ணுக்காக தனது நெஞ்சில் ரத்தம் வடிவதாகவும் வேதனை தெரிவித்தார். பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட மேற்கு வங்க ஆளுநருக்கு மாநிலத்தில் உள்ள பெண்களை பற்றி பேசுவதற்கு உரிமை இல்லை என்றும் கூறினார். சந்தேஷ் காலி சம்பவத்தை பற்றி பேசுவதற்கு முன்பாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண்ணுக்கு ஆளுநர் இவ்வாறு ஏன் கொடுமை இழைத்தார் என்பதற்கு பாஜக பதில் அளிக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்