திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹெச்.ராஜாவுக்கு சீட் கொடுக்கப்பட உள்ளதாலேயே, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அவரை புகழ்ந்து பேசுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைதேர்தல் நடைபெற்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றிபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.