குடியுரிமை திருத்த சட்டத்தில், இந்த நாட்டில் உள்ளவர்களின் குடியுரிமையை பறிக்க கூடிய ஒரு வழிவகையை காட்ட முடியுமா என மம்தா பானர்ஜி மற்றும் ராகுல் பாபாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.