அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 90 லட்சம் மக்களின் பெயர்களை பாஜக சதித் திட்டம் தீட்டி நீக்கிவிட்டதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகப் படுகொலை என்றும், மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்துவதாகவும், அதிகாரிகளை மிரட்டுவதாகவும் பகிரங்கமாகத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் பா.ஜ.க.வின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்த மம்தா பானர்ஜி, எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அஞ்சாது என்றும் உறுதியாகத் தெரிவித்தார். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மினாகான் (Minakhan) பகுதியில் பிரம்மாண்ட பேரணியை நடத்திய அவர், இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.