தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்பதே அஜித் பவாரின் கடைசி ஆசை என அவரது நெருங்கிய நண்பரான கிரண் குஜார் தெரிவித்தார். பாராமதியில் அஜித் பவாரின் அஸ்தியை அவரது மகன்கள் இருவரும் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித் பவாரின் நெருங்கிய நண்பர் கிரண் குஜார், பிரிந்து இருக்கும் தேசியவாத காங்கிரஸ் ஒன்றிணைய வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்ததாக உருக்கமுடன் கூறினார்.