மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாராபுரம் சென்ற தினகரனுக்கு, தொண்டர்கள் மலர் கிரீடம் அணிவித்தும், வீரவாள் பரிசாக வழங்கியும் கவுரவித்தனர். அப்போது திறந்த வேனில் இருந்தபடி பேசிய அவர், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அவரின் துணைவியார் ஜானகியம்மாவால் கூட ஆட்சியை நிலைநிறுத்த முடியவில்லை என்றார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அவரது ஆட்சி தமிழகத்தில் தொடர, சசிகலா தான் காரணம் என்றார்.