அதிமுக ஆட்சியை அகற்ற ஸ்டாலினைப் போல எவ்வளவு பேர் முயற்சித்தாலும், மக்கள் துணையோடு அவர்களை முறியடிப்போம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள தம்மம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பத்து நாட்களுக்கு ஆட்சி நடக்காது என்று கூறினார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறோம் என பெருமிதம் தெரிவித்தார்.