அரசியல்

AIADMK |"தமிழகம் பின்நோக்கி சென்றுவிட்டது.."- ஆவேசப்பட்டு பேசிய ராஜேந்திர பாலாஜி

thanthitv

திமுக ஆட்சியில் எல்லா வழியிலும் தமிழ்நாடு பின்னோக்கி சென்றுவிட்டதாக சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் தேர்தல் களப்பணி குறித்து நடைபெற்ற ஆலோசனையில் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், தான் அமைச்சராக இருந்தபோது சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பால்பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க முன்வந்ததாகவும், ஆனால் ஆட்சி மாற்றத்தால் அந்த தொழிற்சாலையை கொண்டு வர முடியவில்லை எனவும் கூறினார்... மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிவகாசியில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைப்பேன் என உறுதி அளித்தார். மேலும் திமுக ஆட்சியில் வன்முறை, போதைப்பொருள் புழக்கம் பெருகிவிட்டதாகவும் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.

Chengalpattu | Crime | பாதுகாப்பு இல்லத்தில் இருந்து கேட்டை உடைத்து தப்பிய 10+ சிறுவர்கள்

Annamalai Meeting | மாநாட்டு திடலுக்கு மாஸ் என்ட்ரி | தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அண்ணாமலை

S Janaki | இறுதியாக ஒருமுறை முகத்தை காண.. | கண்ணீரோடு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

S Janaki RIP | இன்னும் சற்றுநேரத்தில்.."தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்"

Manjolai Estate | தமிழக வனத்துறையிடமே ஒப்படைக்கப்பட்ட மாஞ்சோலை எஸ்டேட்