அரசியல்

இடைத்தேர்தல் : 90 பேர் விருப்பம் - அதிமுக நேர்காணல்

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்த பிரமுகர்களிடம் அதிமுக உயர்மட்டக்குழு, நேர்காணல் நடத்தியது.

தந்தி டிவி

சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி - காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிட, மொத்தம் 90 பேர் விருப்ப மனு அளித்த நிலையில், அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர் அறிவிப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்