அரசியல்

"500 மருத்துவர்கள், 3000 செவிலியர்கள் பணி நியமனம்" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் விரைவில் 500 மருத்துவர்களும், 3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 7 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் இருதய உள்ளூடுருவி ஆய்வக மைய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தனர். அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

சென்னைக்கு பிறகு விழுப்புரத்தில்தான் மேம்படுத்தப்பட்ட அதிநவீன மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். சுகாதாரத்துறையில் 2, மூன்று

வாரங்களில் 500 மருத்துவர்களும், 3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்