சென்னை காசிமேட்டில் மீன் வியாபாரிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரன் தான் ஸ்லீப்பர் செல் என்று விமர்சித்தார். கடந்த காலத்தை போல் இப்போது ஸ்லீப்பர் செல்களை உருவாக்க முடியாது என்று கூறி அவர், எம்ஜிஆர் ஜெயலலிதாவால் உருவாக்கிய அதிமுகவை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.