அரசியல்

நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பேச அதிமுக குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவில், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம், செய்தி தொடர்பாளர் பிரபாகர், அமைச்சர்கள் தங்க மணி, வேலுமணி ஆகிய 5 பேர் இடம் பெற்று உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், எம்.எல்.ஏ செம்மலை, மனோஜ் பாண்டியன், பெர்னாட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் பிரசாரக் குழுவில், தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செய்தி தொடர்பாளர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன், வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்