AIADMK | Krishnamurali | விபத்தில் சிக்கிய முதியவர்.. உடனே ஓடோடி சென்று உதவிய அதிமுக வேட்பாளர்.. குவியும் பாராட்டு #AIADMK #Krishnamurali #Kadayanallur #Tenkasi தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த முதியவருக்கு, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி மனிதாபிமான அடிப்படையில் உதவிய சம்பவம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்,தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகச் சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்ததால், அதன் மீது மோதி நிலைதடுமாறிய முதியவர் கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், தேர்தல் பரப்புரை பணிகளுக்காகத் தனது ஆதரவாளர்களுடன் அதே வழியாகச் சென்று கொண்டிருந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய அதிமுக வேட்பாளருமான கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா முதியவர் அடிபட்டு கிடப்பதைக் கண்டு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவரைத் தொடர்பு கொண்டு அந்த முதியவருக்குத் தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.