AIADMK | வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் - ஆரத்தி எடுத்த பெண்கள் #aiadmk #tnelection2026 #Chengalpattu #thanthitv செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேடந்தாங்கல், வெள்ளபுத்தூர், கர்க்கிலி மற்றும் பாப்பநல்லூர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் ஆதரவு திரட்டினார். அப்போது அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தப் பிரச்சாரத்தின் போது அதிமுக அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் விவேகானந்தன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். தொகுதி மக்களின் பேராதரவுடன் தனது வெற்றி உறுதி என மரகதம் குமரவேல் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.