அரசியல்

திமுக அரசை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு

தந்தி டிவி

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து, தஞ்சாவூரில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, கும்பகோணத்தில் தனியார் கடையில் பணியாற்றும் பெண் ஒருவர் மீது நால்வர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை கண்டித்தும், மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத் தவறிய திமுக அரசை எதிர்த்தும், தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகே வரும் மே 23ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Real Estate | ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் விதிமீறல்..வெளியான அதிரடி உத்தரவு

முதல் மாநாடு.. அறிவித்தார் அண்ணாமலை

Rain Alert | உருவானது புதிய சிஸ்டம் - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை அலர்ட்?

CM Vijay | TN Govt | TN Budget | காத்திருக்கும் தமிழகம்.. CM விஜய் அதிரடி மூவ் - பரபரக்கும் மீட்டிங்

DMK vs TVK | ``உதயநிதிக்கு திராணி இருந்தால்..’’ - அமைச்சர் ஓபன் சவால்