அரசியல்

பிரதமர் மோடிக்கு அறிவுறுத்துங்கள்.. திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, சுனில் அரோராவுக்கு கடிதம்

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூற வேண்டாம் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என, திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூற வேண்டாம் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என, திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதே, பிரதமர் மோடி அதிமுகவுக்கு வாழ்த்து செய்தி கூறியதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.இது போன்ற செயல்பாடுகள் தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானது என்றும்,தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குறி ஆக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகளுக்கு வாழ்த்து செய்தி கூறாமல் இருக்க பிரதமர் மோடிக்கு, அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்