மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது குறித்து, மாநிலங்களவை தலைவர் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் நவநீதிகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மா, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்கனவே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.