அரசியல்

"நீலகிரி தொகுதியை நிச்சயம் கைப்பற்றுவோம்" - அடித்து சொன்ன அதிமுக வேட்பாளர்

தந்தி டிவி

நீலகிரி மக்களவை தொகுதியை அதிமுக நிச்சயம் கைப்பற்றும் என அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீலகிரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் சோலூர் பகுதிக்கு சென்ற லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு, அப்பகுதி மக்கள் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய லோகேஷ் தமிழ்ச்செல்வன், தற்போதய எம்.பி. ஆ.ராசாவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் நீலகிரி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், நீலகிரி தொகுதியில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் எனவும் லோகேஷ் தமிழ்ச்சென்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்