அரசியல்

அதிமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ஐடி ரெய்டு.. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. திருச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதியின் தம்பி மனைவி பிரியா அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவருடைய வீட்டில் அதிக அளவு பணம் இருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், எட்டரை கிராமத்தில் உள்ள பிரியாவின் வீட்டிற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, ஒரு பையில் இருந்து கட்டுக் கட்டாக பணம் இருப்பதை கண்டறிந்து, வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த வருமான வரி அதிகாரிகள், அதில் இருந்த ஒரு கோடி ரூபாயை கைப்பற்றிச் சென்றனர். இதற்கிடையே, வெளியூரில் இருந்து காரில் வந்து கொண்டிருந்த பிரியாவின் கணவர் அன்பரசனை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக முசிறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Breaking | DMK | Congress | CM ஸ்டாலின் முன்னிலையில்.. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

Breaking | Congress | DMK Alliance | திமுக கூட்டணியில் காங்.க்கு எத்தனை சீட்? | கசியும் தகவல்கள்