அரசியல்

அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்

ஜெய் பீம் படம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு, நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார்.

தந்தி டிவி

அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்

ஜெய் பீம் படம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு, நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம், நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு என்று குறிப்பிட்டுள்ளார்.பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருப்பதாக தெரிவித்துள்ள சூர்யா,எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் தனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை என்று கூறியுள்ளார்.படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை எவருக்கும் வழங்கப்படவில்லை என்ற கருத்தை முழுவதுமாய் ஏற்பதாக தெரிவித்துள்ள சூர்யா,படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களுகும் ஏற்பீர்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளதாக கூறியுள்ள சூர்யா,இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட 'பெயர் அரசியலுக்குள்' சுருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள சூர்யா,அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்ட குரல், 'பெயர் அரசியலால்' மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்து போவதாக குறிப்பிட்டுள்ளார்.விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ தனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள சூர்யா,சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி