அரசியல்

அண்ணாமலை போட்ட அதிரடி ட்வீட்

தந்தி டிவி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று மோடி மீண்டும் ஒரு முறை பிரதமராவார் என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக, 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாட்டின் மனநிலையை பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடியின் வளர்ச்சிக்கான அரசியலையே மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதை பிரதிபலிப்பதோடு, இந்தியா கூட்டணியின் பிரிவினைவாத அரசியலையையும் மக்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் தொடர்ந்து 18 ஆண்டுகால ஆட்சியை மக்கள் அங்கீகரித்துள்ளதாகவும், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஊழல் நடவடிக்கைக்காக காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

தெலங்கானாவில் 2018-ம் ஆண்டு வெறும் 6.9 சதவீத வாக்குகள் பெற்ற பா.ஜ.கவின் வாக்கு சதவீதம், தற்போது 13.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை