#sasikala #sasikalanewparty #sasikalameeting சசிகலா உரையை கண்டுகொள்ளாமல் வெளியேறிய தொண்டர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேட்டில் சசிகலா பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, தொண்டர்கள் நாற்காலியை விட்டு எழுந்து, வெளியே சென்றது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது . முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், கோட்டைமேட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா கலந்து கொண்டு, தான் தொடங்க உள்ள புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் அமைக்கப்பட்ட நிலையில், சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலா உரையின் போது சிலர் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.