அரசியல்

ADMK | Cheyyur | செய்யூர் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு அணிவிக்கப்பட்ட பிரம்மாண்ட அன்னாசி பழ மாலை

செய்யூர் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு அணிவிக்கப்பட்ட பிரம்மாண்ட அன்னாசி பழ மாலை

thanthitv

ADMK | Cheyyur | TN Election 2026 | செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு அணிவிக்கப்பட்ட 200 கிலோ பிரம்மாண்ட அன்னாசி பழ மாலை #ADMK #cheyyur #admkcandidate #tnelection2026 #thanthitv செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர் தீவிர தேர்தல் பிரசாரம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகர், இன்று திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெங்கப்பாக்கம், ஆரம்பாக்கம், நத்தமேடு, விட்டிலாபுரம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவருக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, விட்டிலாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் ராஜசேகருக்கு 200 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட அன்னாசி பழ மாலை அணிவிக்கப்பட்டது. பெண்கள் ஆலாத்தி எடுத்து வரவேற்ற நிலையில், வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர், தொகுதி மேம்பாட்டிற்கான வாக்குறுதிகளையும் முன்வைத்தார்.

BREAKING || Reject ஆகுமா விஜய்யின் வேட்புமனு? - தகவல்களில் குழப்பம்

PM Modi | Puducherry | புதுச்சேரி CM உடன் ரோடு ஷோ செல்லும் PM மோடி | வழிநெடுக திரண்ட தொண்டர்கள்

Congress | DMK Alliance | ``இனி பிரச்சனை உருவாக வாய்ப்பில்லை.. ஆனா திமுக தொண்டர்கள் மத்தியில்..''

Congress | TN Elections | 28ல் 27க்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஒரு தொகுதி மட்டும் மிஸ்..?

BREAKING || வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... யார் யாருக்கு வாய்ப்பு? பல சர்ப்ரைஸ்கள்