Constituency Delimitation | 3 மசோதாக்கள் தோற்கடிப்பு - வெகுண்டெழுந்து எதிர்கட்சிகளை அடித்த அமித்ஷா #amitshah #ConstituencyDelimitation #thanthitv மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'பெண் சக்தியை' அவமதித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மகளிர் இடஒதுக்கீட்டு சீர்திருத்த மசோதாவை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முறியடித்துவிட்டு, அதனை வெற்றிக் கூச்சலிட்டு கொண்டாடுவது கற்பனை செய்ய முடியாத ஒரு கீழ்த்தரமான செயல் என்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் இந்தச் செயலால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 33% இடஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமித்ஷா, இந்த செயலுக்காக, இனி வரும் ஒவ்வொரு தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகள் பெண்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.