அரசியல்

11 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கு : விரைவில் தீர்ப்பு வரவுள்ளது - ஆர்.எஸ்.பாரதி தகவல்

துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

தந்தி டிவி
துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் அலுவலம் திறக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்,எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆர் எஸ் பாரதி, ஒரு ஆண்டுக்கு முன்னரே கட்சி ஒழுங்கை மீறிய 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார். பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஐ. பெரியசாமி, பாஜகவுக்கு வட மாநிலங்களிலும் செல்வாக்கு சரிந்துள்ளதாகவும், 182 இடங்களுக்கு மேல் வெல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்