செய்திகள்

"கோலி வர மாட்டார்" - டிராவிட் சொன்ன தகவலால் ரசிகர்கள் கவலை

தந்தி டிவி

ஆப்கானி ஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி விளையாட மாட்டார் என அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மொகாலியில் நடைபெற உள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் டிராவிட், நாளைய போட்டியில் கோலி விளையாட மாட்டார் என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறினார். அடுத்த இரண்டு போட்டிகளிலும் கோலி விளையாடுவார் என்றும் டிராவிட் தெரிவித்தார். முதல் டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார் என ராகுல் டிராவிட் பேசினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை