முகவரி கேட்பது போல் இளைஞர் செய்த கொடூரம்.. நிலைகுலைந்த மூதாட்டி #mumbai #theft #crime #oldwomen #cctv #thanthitv மும்பையில் முகவரி கேட்பது போல் மூதாட்டியிடம் செயின் பறிப்பு மும்பையில், முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியைத் தாக்கி தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டிவாலி மேற்கில் உள்ள உமங் அடுக்குமாடி குடியிருப்பில், இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டுக் கதவைத் திறக்க முயன்ற மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்த மர்ம நபர், திடீரென தாக்கி சங்கிலியைப் பறித்துச் சென்றார். இந்தச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.