இந்தியா

அமித்ஷா தமிழில் போட்ட X பதிவு | Amit Shah | BJP

தந்தி டிவி

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது, முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட மகத்தான மனிதர்கள் மீது நமது தேசம் வைத்திருக்கும் நன்றி உணர்வுக்கு ஒரு சான்றாகும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ள அமித்ஷா, நமது தேசத்தின் உணவு நெருக்கடி காலத்தை, உணவுப் பாதுகாப்பு காலமாக மாற்றக்கூடிய கடினமான பணியை தனது அறிவியல் திறமையால் நிறைவேற்றிய ஒரு அரிய மேதையாக சுவாமிநாதனை நமது வரலாறு நினைவு கூர்வதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். சிறந்த கல்வியாளரான சுவாமிநாதனின் தேடல்கள், அற்புதமான ஆராய்ச்சிப் பணிகளுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தைத் தொடர ஏராளமான அறிவார்ந்தவர்களை மற்றும் திறமையானவர்களை உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், உயரிய பாரத ரத்னா விருதால் அலங்கரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்காக, பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்