இந்தியா

IVF Cow| உலகின் முதல் IVF கன்று குட்டி இந்தியாவில் பிறப்பு

உலகின் முதல் IVF கன்று குட்டி இந்தியாவில் பிறப்பு

thanthitv

அசாம் மாநிலத்தில் அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு இனத்தைச் சேர்ந்த லக்கிமி மாடு, உலகின் முதல் ஐவிஎஃப் கன்றுகுட்டியை பிரசவித்துள்ளது... அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கால்நடை அறிவியல் கல்லூரியில், லக்கிமி (Lakhimi) இனத்தைச் சேர்ந்த பெண் கன்று பிறந்துள்ளது. ஐவிஎஃப் (IVF - In-Vitro Fertilization) முறையில் பிறந்த இந்தக் கன்று, அழிந்து வரும் லக்கிமி மாட்டு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் (Rashtriya Gokul Mission) நிதியுதவியுடன் இந்தச் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனை மூலம், பால் உற்பத்தியை அதிகரித்து கால்நடைத் துறையை மேம்படுத்துவதுடன், விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்துவதற்கு உதவும் என்று கால்நடை மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்... இந்தச் சிறிய கன்று, அசாமின் பால்வளத் துறையில் புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகவும், உயிரித் தொழில்நுட்பத் துறையில் முக்கிய மைல்கல்லாகவும் அமையும் என அம்மாநில முதல்வர் முதலமைச்சர் ஹிமாந்தா சர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்...

Sengottaiyan | TVK | CM Vijay | "CM விஜய் விரைவில் அறிவிப்பார்..." - குட் நியூஸ் சொன்ன அமைச்சர் KAS

ATM Theft | தமிழகத்தையே பதறவைத்த ஸ்ரீபெரும்புதூர் ATM கொள்ளை - அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

Swine Flu | H1N1 Surge | தமிழகத்தில் தீவிரமாக பரவும் `H1N1' வைரஸ்.. சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

Chennai | Onion Price | Central Government | ஒரே மாதத்தில் வெறி ஆட்டம் ஆடிய வெங்காயம் விலை

TN Govt Jobs|``கவர்மெண்ட் வேலையில் இனி இவர்களுக்கே முன்னுரிமை’’ - தமிழகத்தில் அமலாகிறது புதிய சட்டம்