இந்தியா

"பொறுப்பற்ற முறையில் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறோம்" - ஜக்கி வாசுதேவ்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க சட்டம் கொண்டு வருவது அவசியம் என ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தி உள்ளார்

தந்தி டிவி

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் நிர்வாக இயங்குநர் எரிக் சோல்கம், நடிகை தியா மிர்சா பங்கேற்ற விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்த ஜக்கி வாசுதேவ், நீர், நிலம் மற்றும் காற்று பயன்பாடு தேவைக்கு குறைவாக்க குறைந்து வருவது மிகவும் ஆபத்தான நிலைக்கு நாம் செல்வதை சுட்டிக்காட்டுவதாக உள்ளதாக கூறினார். 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ள நிலையில், இந்த நிலை தொடர்ந்தால் நாம் ஆண்டவனை நம்புவதை தவிர வேறு வழியில்லை என கூறினார். தற்போதைய சூழ்நிலைக்கு பிளாஸ்டிக்கை நாம் பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தி வருவதும் ஒரு காரணம். பிளாஸ்டிக் ஒரு அருமையான கண்டுபிடிப்பு. ஆனால் நாம் அதனை முறையாக பயன்படுத்தாதே, சுற்றுச்சூழலின் இன்றைய நிலைக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க கொள்கை வகுத்து, சட்டம் இயற்றி அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குநர் எரிக் சோல்கமும் பங்கேற்று, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்து பேசினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்