இந்தியா

"ஆண் குழந்தைகளை தான் கண்காணித்து, கண்டித்து வளர்க்க வேண்டும்.." - ஆளுநர் தமிழிசை

தந்தி டிவி

ஆண் குழந்தைகளை கண்டித்தும் கண்காணித்தும் வளர்க்க வேண்டுமென, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மகளிர் தின வாழ்த்து செய்தியில் அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சர்வதேச மகளிர் தின வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அதில் பெண்களுக்கு செய்தி சொல்வதா அல்லது ஆண்களுக்கு செய்தி சொல்வதா என்ற குழப்பத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளைத்தான் தாய்மார்கள் கண்டித்தும், கண்காணித்தும் வளர்க்க வேண்டும் என்றும், பெண்களின் வளர்ச்சிக்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, ஊறு விளைவிக்கக் கூடாது என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண்கள் இன்னும் போராட வேண்டிய நிலையில் இருப்பது வருத்தமளிப்பதாகவும், தடைகளை உடைத்து பெண்கள் வெற்றியாளர்களாக வலம்வர வேண்டும் என்றும் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்