இந்தியா

``பெண்களின் அழகும்... லவ்வும்..'' புயலை கிளப்பிய MLA - கொதிப்பில் பெண்கள் | Devendra Bhuyar

தந்தி டிவி

``பெண்களின் அழகும்... லவ்வும்..'' புயலை கிளப்பிய MLA - கொதிப்பில் பெண்கள் | Devendra Bhuyar

#DevendraBhuyar #MLA #Maharashtra #ViralVideo

அழகான பெண்கள் விவசாயிகளை ஒருபோதும் திருமணம் செய்வதில்லை என பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் மகாராஷ்ட்ரா சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர்... இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...

மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் உள்ள வரூத்-மோர்ஷி தொகுதியின் எம்.எல்.ஏ. தான் தேவேந்திர புயார்...இவர் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், அம்மாநில துணை முதலமைச்சரான அஜித் பவாரின் ஆதரவாளராகவும் அறியப்படுபவர்..

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தொடர்ந்து சர்ச்சை கருத்துகளையே பேசியுள்ளார்.

ஒரு பெண் அழகாக இருந்தால், அவர் விவசாயிகளை ஒருபோதும் திருமணம் செய்ய விரும்ப மாட்டார் என பேசியதோடு, அவர் நல்ல வேளையில் உள்ள ஆணையே தேர்வு செய்வார் என சர்ச்சை பேச்சை தொடங்கியுள்ளார்.

அத்துடன் பெண்களை வகைப்படுத்தும் வகையில் பேசிய அவர், சற்று அழகு குறைந்த பெண்கள் மளிகை கடை நடத்துபவர்களை விரும்புகிறார்கள் என்றும், அதை விட குறைவான அழகை கொண்ட பெண்கள் ஒரு விவசாயியின் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பேசியுள்ளார்..

இத்துடன் நிற்காமல், இத்தகைய திருமணத்தில் குழந்தைகளும் நல்ல தோற்றத்தில் இருப்பது இல்லை எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் எம்.எல்.ஏ. தேவேந்திர புயார்...

இவரின் கருத்து பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சருமான யஷோமதி தாகூர் பெண்கள் குறித்து அவர் இவ்வாறு பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் தேவேந்திர புயாரின் சர்ச்சைக் கருத்துக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்..

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

TTV Dhinakaran | EPS | "பச்சை தமிழர் அண்ணன் ஈபிஎஸ்..." - TTV தினகரன் சொல்லச்சொல்ல அதிர்ந்த அரங்கம்

Breaking | Cinema | Divorce | முடிவுக்கு வந்த தனித்தனி வாழ்கை.. விவாகரத்து பெற்றார்

🔴LIVE : பிரதமர் மோடி பேச்சு (தமிழில்)

BREAKING || பிளஸ்-2 மாணவியை துடிதுடிக்க சீரழித்து கொலை - தமிழகத்தையே உலுக்கிய பேரதிர்ச்சி