சபரிமலை அய்யப்பன் கோவிலில், 35 வயது மஞ்சு என்ற இளம்பெண், மாறு வேடத்தில் சென்று, சுவாமி தரிசனம் செய்தார். சபரிமலையில் மகர விளக்கு பூஜை துவங்க உள்ள நிலையில், மஞ்சு, சுவாமி தரிசனம் செய்த வீடியோ காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு, சபரிமலை கோவிலில், 18 படி ஏறி, அய்யப்பனை வழிபட்டதாக கேரள செய்தி சேனலுக்கு அளித்தபேட்டியில் தெரிவித்துள்ளார்.