#Uttarpradesh #Attack #ViralVideo #ThanthiTV Uttarpradesh | அதிகாரியின் கன்னத்தில் பளார் பளார் என அடித்த பெண் - உ.பி.யில் பரபரப்பு சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம்சாட்டி, மின்வாரிய செயற்பொறியாளரை பெண் ஊழியர் ஒருவர் அவரது அலுவலக அறையிலேயே சக ஊழியர்கள் முன்னிலையில் கன்னத்தில் சரமாரியாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரி தன்னைத் தொடர்ந்து தனியாக அறைக்கு அழைத்து, தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவித்ததுடன், கையைப் பிடித்து இழுத்ததாகவும் அந்தப் பெண் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.