இந்தியா

கணவரை கொ*று சிறைக்கு சென்ற மனைவிக்கு பூத்த புது காதல்... சிறையிலேயே தாலி கட்ட கோர்ட் போட்ட ஆர்டர்

கணவரை கொ*று சிறைக்கு சென்ற மனைவிக்கு பூத்த புது காதல்... சிறையிலேயே தாலி கட்ட கோர்ட் போட்ட ஆர்டர்

thanthitv

கணவரை கொ*று சிறைக்கு சென்ற மனைவிக்கு பூத்த புது காதல்... சிறையிலேயே தாலி கட்ட கோர்ட் போட்ட ஆர்டர் ராஜஸ்தானில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள காதல் ஜோடிக்கு, சிறை வளாகத்திலேயே திருமணம் செய்து கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜோத்பூரைச் சேர்ந்த மூலாராம், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மாண்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே சிறையில், கணவரை கொலை செய்த வழக்கில் 2019-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மும்பையைச் சேர்ந்த சீமா காட்ஸேவும் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி இருவரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், திருமணம் செய்து கொள்வது வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு பகுதி எனக் கூறி, மாண்டோர் சிறை வளாகத்திலேயே திருமணம் நடத்த அனுமதி வழங்கியது. திருமண நிகழ்ச்சியில் பூசாரி உள்ளிட்ட அதிகபட்சம் 21 குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கலாம் என்றும், திருமணச் செலவுகளை மூலாராம் ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CJP Delhi Protest | டெல்லியை குலுங்கவிடும் `கரப்பான் கட்சி’ - போலீஸ் தடியை எடுத்ததால் களேபரமான சூழல்

Mother Son | கழுத்தை இறுக்கி கத்தியால் குத்தி உரலை போட்டு.. தாயை கொன்று கோரமாக்கிய +2 படித்த மகன்

Delhi | ஆயிரக்கணக்கில் குவியும் கரப்பான் பூச்சி கட்சியினர்..

Sabarivarman Case சபரிவர்மன் செல்போனில் ஆதாரம்? தனிப்படைக்கு தட்டிய `பொறி’.. தலைகீழாக மாறும் கேஸ்

Engineering இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம் - மாணவர்கள் இத நோட் பண்ணுங்க; ரொம்ப முக்கியம்