இந்தியா

கணவனை கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் - கணவன் உயிருடன் திரும்பியதால் ஆச்சரியம்

தந்தி டிவி
• கணவனை கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் • உயிருடன் வந்த கணவரால் அதிர்ச்சி • கொலை செய்தது எப்படி? மனைவி வீடியோ வைரல் • கேரளாவில் கணவனை கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் அளித்த நிலையில், கணவன் உயிருடன் திரும்பிய சம்பவத்தில், எவ்வாறு கொலை செய்தேன் என மனைவி நடித்துக் காட்டிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • பத்தணந்திட்டா பகுதியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற மீன் வியாபாரி, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமான நிலையில், சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரது மனைவியை விசாரித்தனர். அப்போது, மனைவி அப்சானா தனது கணவனை கொலை செய்ததாக கூறினார். இச்சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கணவன் நவ்ஷாத் இடுக்கி மாவட்டத்தில் உயிரோடு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அப்சானா ஏன் கணவரை கொலை செய்வதாக பொய் கூறினார் என்ற கேள்வி எழுந்த போது, போலீசார் அவ்வாறு கூறுமாறு நிர்பந்தித்ததாக தெரிவித்தார். இந்நிலையில், அப்சானாவை காவலில் வைத்திருந்தபோது அப்சானாவை அவரது வீட்டிற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் தன் வீட்டில் போலீசாரிடம் தனது கணவரை எவ்வாறு கொலை செய்தேன் என நடித்துக் காட்டிய சம்பவம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு