இந்தியா

Z + பாதுகாப்பு என்றால் என்ன?

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருந்த Z பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், Z பிளஸ் பாதுகாப்பின் சிறப்பம்சங்கள் என்ன...?

தந்தி டிவி

தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசின் உள்துறை சார்பில் இசட், இசட் பிளஸ், ஒய், எக்ஸ் ஆகிய பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்திய அளவில், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 24 பேருக்கு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதில், ஒரு குண்டு துளைக்காத வாகனம், இரண்டு பாதுகாப்பு வாகனம் மற்றும் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் மொத்தம் 24 பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில்,கருணாநிதி மறைந்ததை அடுத்து, நேற்றுடன் அவருக்கு வழங்கப்பட்டிருந்த "இசட்" பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

Z + பாதுகாப்பு என்றால் என்ன?

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருந்த Z பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், Z பிளஸ் பாதுகாப்பின் சிறப்பம்சங்கள் என்ன...?

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்