இந்தியா

நீரை சேமிக்க வேண்டும்- பிரதமர் மோடி

அதிகமான நீர் இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் நீரை சேமிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி
நீரை சேமிக்க வேண்டும்- பிரதமர் மோடி

அதிகமான நீர் இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் நீரை சேமிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜல் ஜீவன் இயக்க கிராம பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் வழங்கும் குழுக்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், குஜராத் போன்ற மாநிலங்களில் கடுமையான வறட்சி சூழலை கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு துளி நீரும் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தான் நன்கு உணர்ந்து இருப்பதாக தெரிவித்தார்.2019 இல் ஜல் ஜீவன் திட்டம் துவங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இதுவரை 5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.நாட்டின் 80 மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் சென்று கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.அதிகமான நீர் கொண்ட இடங்களில் வசிப்பவர்கள் நீரை சேமிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டவர், இதற்காக மக்கள் தங்கள் பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு