இந்தியா

குடும்பத்தை இழந்த இளம்பெண்ணின் வருங்கால கணவரையும் பறித்த எமன்..நிலைகுலைய செய்யும் கடைசி நிமிட வீடியோ

தந்தி டிவி

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்து தவித்த இளம்பெண்ணின் வருங்கால கணவரும் விபத்தில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு முண்டகை பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்பவர், ஜென்சன் என்பவரை காதலித்து வந்த நிலையில், அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த சூழலில் வயநாடு நிலச்சரிவில் ஸ்ருதி குடும்பத்தாரை இழந்த சூழலில், அவருக்கு ஆறுதலாக ஜென்சன் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில், ஜென்சன், மற்றும் உறவினர்களுடன் ஸ்ருதி காரில் சென்றுக்கொண்டிருந்த போது, கல்பெட்டா வெள்ளரம்குன்றில் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜென்சன் தலையில் அடிபட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே குடும்பத்தினரை இழந்து சோகத்தில் மூழ்கிய ஸ்ருதிக்கு, வருங்கால கணவரும் விபத்தில் இறந்தது பெருஞ்சோகத்தை தந்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு